top of page
5413a731-743a-41af-a574-dd6044d0a361.jpg

cs;sj;ij czu;e;J

thOk; tho;f;if!

jpahdk; | cs;Szu;T | epjp Nkyhz;ik | ey; cwTfs; %yk; cq;fis ePq;fs; fz;lwpAq;fs;.

jdpegu; tsu;r;rp
nghUshjhu Kd;Ndw;wk;
njhopy;El;g gapw;rp
jiyikj; jpwd; gapw;rp
Md;kPfk;
cwTfspd; Nkk;ghL
Untitled design (3)-Photoroom.png
ngz;fs; Kd;Ndw;wk;
MNuhf;fpa tpopg;Gzu;T
r%f mf;fiw kw;Wk; nghWg;Gzu;T
core values

"கோபமும் சுயநலமும் இல்லாமல், மனதை ஒருமைப்படுத்தி யோகாவின் பாதையைப் பின்பற்றி தங்களை உணர்ந்தவர்கள், நிலையான உன்னத நிலையை எப்போதும் அடைந்து இருப்பார்கள்."         

-ஸ்ரீ கிருஷ்ணர்

மனித வாழ்வில் மானுட தர்ம சாஸ்திரமே அவரை நன்மையின் பாதையில் வழிநடத்தும். அவற்றையே மகாபாரதம் எனும் பெரும் காவியம் உணர்த்துகிறது.

பெண்கள் முன்னேற்றம், சுகாதார விழிப்புணர்வு, ஆன்மீக வலிமை, தனிநபர் மேம்பாடு, திறன் மேம்பாடு, நிதி சுதந்திரம், நல் உறவுகள், தலைமைத்திறன், சமூக பொறுப்பு என அக்காவியத்தில் கூறப்படும் அனைத்து நன்மைகளையும் எளிமையாக அனைவரிடமும் கொண்டு சேர்க்கவே "AS Foundation" முனைகிறது.

5413a731-743a-41af-a574-dd6044d0a361.jpg
Feels like a hug for your skin (11)-Photoroom.png

Kf;fpa mk;rq;fs;

vz;zk; tha;g;ghFk; ,lk;> Mu;tk; rhjidahFk; ghij — AS Foundation.

Untitled design (3)-Photoroom.png

01

பெண்கள் முன்னேற்றம்

“பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் தெய்வீகம் மலர்கிறது. ஏனென்றால் அவள் நித்திய ஆன்மாவின் பிரதிபலிப்பாவாள்.”

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையையும், தன் வேலை வாய்ப்பையும் உருவாக்க ஆற்றல் மிக்கவராய் இருக்க வேண்டும். உலகின் சக்திவாய்ந்தவர்கள் வலிமையான பெண்கள் தான்.

ஒரு பெண் முழுமையாக வலிமையடைய, உட்புற உற்சாகத்துடன் வெளிப்புற ஊக்கமும் தேவையாகிறது. பகவத்கீதையின் ஆழமான ஞானத்தின் மூலம் அந்த வலிமையும் உந்துதலையும் வழங்குவது தான் AS Foundation.

Untitled design (3)-Photoroom.png

நீங்கள் உலகத்தை பார்க்கும் அழகு, உங்கள் உள்ளழகின் பிரதிபலிப்பே. ஆரோக்கியமே ஒரு உறுதியான மற்றும் நிறைவான வாழ்க்கையின் அடித்தளம். உங்கள் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் உங்கள் கனவுகள், இலக்குகள் மற்றும் எதிர்காலம் சிறப்பாக மலர முடியும்.

ஒரு பிரகாசமான மற்றும் கவலையற்ற வாழ்க்கையை வாழ, விழிப்புணர்வும் சரியான தீர்வுகளும் தேவை. அதற்காகத்தான் AS Foundation, ஆரோக்கிய விழிப்புணர்வை பரப்பி, நலன்களை பற்றி விழித்திருப்பதற்கான சக்தியையும், ஒரு நல்ல நாளைய கட்டும் ஆதாரத்தையும் வழங்குகிறது.

02

சுகாதார விழிப்புணர்வு

"உங்கள் உடல்,  உங்கள் கோயிலாகும். அதனால் நல்ல பழக்கங்கள், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் அன்பான சிந்தனைகளால் அதை அழகுபடுத்துங்கள்."

Untitled design (3)-Photoroom.png

03

ஆன்மிக சக்தி

"ஆன்மா விழித்ததும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாகிறது."

ஆன்மிக சக்தி ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. இது ஒருவர் தனது வாழ்க்கையை உணர்ந்து பார்க்க உதவுகிறது. ஆன்மிகத்தைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவர் தர்மத்தின் பாதையில் சென்று அர்த்தமுள்ள எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

இது வாழ்க்கையை ஒரு தெய்வீகப் பயணமாக மாற்றி, எந்த சவாலையும் அமைதியுடன் எதிர்கொள்ளும் ஆற்றலை தருகிறது. வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க அமைதி மிகவும் அவசியம்.

அதனால் தான் AS Foundation, ஆன்மிக சக்தியை வளர்த்தெடுத்து, ஒவ்வொரு நபரின் தெய்வீகக் குறிக்கோளை விழிப்பூட்டி, தர்மத்தின் பாதையில் வழிநடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Untitled design (3)-Photoroom.png

எல்லோரும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் உலகில், பரிணாம வளர்ச்சியடையாமல் இருப்பது, தேங்கி நிற்கும் நீராக மாறுவது போன்றது - உயிரற்றதாகவும் தூய்மையற்றதாகவும். நம் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, ஆன்மீக சுத்திகரிப்பு அவசியம். அமைதியான நாள் அமைதியான மனதுடன் தொடங்குகிறது, அது தியானத்துடன் தொடங்குகிறது.

AS Foundation அர்த்தமுள்ள தியான வழக்கத்தை நிறுவுவதற்கான எளிமையான மற்றும் பயனுள்ள பாதையை வழங்குகிறது. இது தனிநபர்களை ஒரு நிறைவான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துவதில் வேரூன்றியுள்ளது.

04

தனிநபர் மேம்பாடு

"உங்களை அறிவதுதான் அனைத்து ஞானத்திற்கும் ஆரம்பம்."

Untitled design (3)-Photoroom.png

05

நிதி சுதந்திரம்

“நிதி சார்ந்த வெற்றியின் அடித்தளம் - நிதி அறிவே!”

இன்றைய உலகில், பணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, ஆனால் அதைவிட முக்கியமானது என்னவென்றால், உங்களிடம் உள்ள பணத்தை நீங்கள் எவ்வளவு  சிறப்பாக நிர்வகித்து, பராமரிக்கிறார்கள்  என்பதுதான்.

பலர் தங்கள் பணத்தை நிர்வகிப்பது கடினமாக உணர்கிறார்கள், அது மனஅழுத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. உங்கள் பணத்தை நன்றாகக் கையாளக் கற்றுக் கொள்ளும்போது, ​​உங்கள் வாழ்க்கையில் முழுமையான கட்டுப்பாட்டை அடைய முடியும்.

அதனால்தான் AS Foundation, மக்களுக்கு தங்கள் பணத்தை சிறப்பாக நிர்வாகித்து, நிதி சுதந்திரத்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

Untitled design (3)-Photoroom.png

உங்களைச் சுற்றி உள்ள நபர்களே நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்னவாக மாறுகிறீர்கள் என்பதை வடிவமைக்கும் திறன் கொண்டவர்கள்.

உங்கள் உறவுகள் உங்கள் மனநிலை மற்றும் உங்கள் எதிர்காலத்தை கூட பாதிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள். ஒரு துளி அசுத்தமான நீர் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரை கெடுப்பது போல ஒருவரிடம் இருந்து வரும் எதிர்மறையான கருத்து உங்கள் முழு வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். அதனால்தான் நிபுணர்கள் ஆரோக்கியமான, நேர்மறையான தொடர்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

நல் உறவுகளின் உண்மையான மதிப்பைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றை நேர்மறையாக வளர்ப்பதற்கும், உற்சாகமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்குவதற்கு  AS Foundation இங்கே உள்ளது.

06

நல் உறவுகள்

"உன் நண்பர்களை எனக்குக் காட்டு, உன் எதிர்காலத்தை நான் உனக்குக் காட்டுகிறேன்."

Untitled design (3)-Photoroom.png

07

தலைமைத்திறன்

“சிறந்த தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லமாட்டார்கள், அது எப்படி செய்யப்படுகிறது என்பதைக் காட்டுவார்கள்.”

இந்த உலகில், பலர் பின்பற்றுகிறார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே வழிநடத்துகிறார்கள். உண்மையான தலைமைத்துவம் எளிதானது அல்ல. அதற்கு பொறுமை, ஞானம் மற்றும் அனுபவம் தேவை. ஒரு தலைவராக மாறுவது என்பது ஆரம்பம் மட்டுமே; அப்பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு தெளிவு, நம்பிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி தேவை.

ஒரு சிறந்த தலைவர் தெளிவான திசையை வழங்க வேண்டும் மற்றும் குழப்பமின்றி தொலைநோக்கு பார்வை மூலம் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். தெளிவான நோக்கத்துடன் வழிநடத்துபவர்களையே மக்கள்  பின்பற்றுகிறார்கள்.

அதனால்தான் AS Foundation தெளிவான சிந்தனை, வலிமையான மதிப்பீடுகள், மற்றும் நம்பிக்கையுடன் வழிகாட்டும் திறனை வளர்க்கும் பயிற்சிகளை வழங்கி, அனைவரையும் திறமையான தலைவர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Untitled design (3)-Photoroom.png

நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் நல்லது செய்வதும், நல்ல எண்ணங்களைப் பரப்புவதும் நம்முடைய பொறுப்பு. நாம் நல்லதை பரப்பினால், அதுவே நம்மிடம் திரும்பி வரும்.

அதனால்தான் நிபுணர்கள், எதிர்மறையை விட நேர்மறையை தேர்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள்.

அதற்காகத்தான் AS Foundation, நல்ல எண்ணங்களைப் பரப்பவும், ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பை உணர்த்தவும் முயற்சி செய்கிறது.

08

சமூகப் பொறுப்பு

"ஒரு நல்ல சமுதாயம் உருவாக, ஒவ்வொருவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும்."

Untitled design (3)-Photoroom.png

09

திறன் மேம்பாடு

"புதிய திறமையில் தேர்ச்சி பெறுவது புதிய வாய்ப்புகளைத் திறப்பதற்கான ஒரு படியாகும்."

உணர்ச்சி நுண்ணறிவு உள்ளவர்கள் கவனச்சிதறல்களில் தங்கள் நேரத்தை வீணாக்க மாட்டார்கள், அவர்கள் எப்போதும் கவனத்துடன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு தங்களுடைய சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்கள், மேலும் மன அமைதி தங்களுக்குள்ளிருந்து வருகிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.

சமநிலையுடன் இருக்க, மன இரைச்சலை அமைதிப்படுத்துவதும், அமைதியான, புதிய எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதும் முக்கியம். தியானம் இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

அதனால்தான் துறவிகள் தொடர்ந்து தியானம் செய்கிறார்கள். இது அவர்கள்  உணர்ச்சி ரீதியாகவும் சமநிலையில் இருக்கவும், வெளிப்புற கவனச்சிதறல்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

footer_bg1.png
bottom of page